Skip to main content

நடிகர் மாரிமுத்து காலமானார்!

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Actor Marimuthu passed away

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல்வேறு படங்களில் நடித்தவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லன் நடிகரோடு துணையாக வலம் வருவார். சின்னத்திரையில் வெளியாகும் சீரியல் ஒன்றில் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பட்டித் தொட்டியெங்கும் இவர் சென்றடைந்தார். அதுவும் குறிப்பாக “இந்தாம்மா... ஏய்...” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது.

 

சென்னையில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருந்தார் என்பதும் சமீபத்திய இவரது பேட்டிகளின் மூலம் தெரிய வந்தது. இவரது இறப்பு குறித்த முதற்கட்ட தகவலாக மாரடைப்பால் இறந்திருக்கிறார் என்ற உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. இறப்பு குறித்த மேலும் தகவல்கள் மற்றும் இறுதிச் சடங்கு குறித்த அறிவிப்புகள் விரைவில் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்