Skip to main content

“எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் இதற்கு காரணம்” - விஜய் சேதுபதி!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
maharaja movie press meet

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கை கோர்த்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’  படத்தினை இயக்கிய  நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் நித்திலன், "என்னுடைய டெக்னீஷியன்ஸ் எல்லோருமே திறமையானவர்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. விஜய்சேதுபதி ரொம்ப தன்மையான மனிதர். செலவு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்த சுதனுக்கு நன்றி. விஜய்சேதுபதி, அபிராமி, மம்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது என்பதால் ரொம்பவே ஸ்பெஷல். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

நிகழ்வில் பேசிய நடிகை அபிராமி, "விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படத்தில் நானும் ஒரு பார்ட் என்பதில் மகிழ்ச்சி. அவர் பெயரைக் கேட்டதுமே உடனே ஓகே சொல்லி விட்டேன். மற்ற எல்லாமே இந்தப் படத்தில் எனக்கு போனஸ்தான். படத்தில் எல்லோருமே திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர். யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. நீங்களும் யார் என்று தெரிந்து கொள்ள தியேட்டர் வந்து படம் பாருங்கள். நன்றி" என்றார்.

நிகழ்வில் பேசிய நடிகை மம்தா மோகன்தாஸ், "'எனிமி' படத்திற்குப் பிறகு நல்ல கதை கொண்ட 'மகாராஜா' படம் மூலம் திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி. இது வெறும் படமாக மட்டுமல்லாது, ஒரு அனுபவம். நான் நிறைய சீனியர் நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அவர்களில் இருந்து சேது மிகவும் வித்தியாசமானவர். அவர் கரியரில் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார். நித்திலன் திறமையான இயக்குநர். படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

நிகழ்வில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, " ராமோஜிராவ் என்ற ஜாம்பவானின் மறைவு எனக்கு வருத்தம். அவருக்குத் தலை வணங்குகிறேன். என்னுடைய ஐம்பதாவது படமாக 'மகாராஜா' அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  வினோத், கல்கி, அபிராமி, மம்தா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அவ்வளவு அழகாக வேலை பார்த்துள்ளனர். ஐம்பதாவது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் என் இயக்குநர்கள், மீடியா என எல்லோரும் தந்த திட்டும் பாராட்டும்தான் காரணம். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரபல நடிகைகள் என்னுடன் நடிக்க மாட்டார்கள்” - விஜய் சத்யா வருத்தம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Dilraja movie actor speech

சாணக்யா, வாத்தியார், துரை போன்ற படங்களை இயக்குநரும் விஜய், பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார், அருண்விஜய், சிம்பு போன்ற பெரிய நடிகர்களை இயக்கியவருமான இயக்குநர் ஏ.வெங்கடேஷ். சமீபகாலமாக பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு புறமிருக்க மீண்டும் இயக்குதல் பக்கம் கவனம் திரும்பியவர் தில்ராஜா என்ற படத்தை இயக்கியிருக்கிறார், 

இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சத்யா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "தில்ராஜா படம் மூன்று நாளில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கக் கூடிய சம்பவம்தான் . பேரைச் சொன்னால் கொஞ்சம் ஈர்க்கும் விதமாக இருக்கம், அதுதான் டைட்டில் இப்படி வைக்க காரணம். வாழ்க்கையில் எல்லாரும் தைரியமானவர்கள்தான், ஆனால் அனைவருக்கும் ஒரு லிமிட்டேஷன் இருப்பதால் அதை வெளியே காண்பிக்க முடியாது. அதையும் மீறி ஒரு விஷயம் வரும்போது எல்லோரும் தில்ராஜா தான். வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது வைரலாகியது அதைப் இப்படத்தின் பாடலில் வைத்தால் ஈர்க்கும் விதமாக  இருக்கும் என நினைத்து வைத்ததுதான். ஆனால், படத்தின் பெயருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை சந்திக்க முற்பட்டபோது பார்க்க முடியவில்லை”. 

“பிரபலமான நடிகைகள் என்னுடன் நடிக்க வருவார்களா எனத் தெரியவில்லை. மிகவும் பிரபலமாக  இருப்பவர்களுடன் எங்கள் படக்குழு நடிக்க மாட்டார்கள், அந்த மாதிரி பிரமாண்ட படமும் பண்ணவில்லை, செரினை கமிட் பண்ணியதில் எனக்கு சந்தோஷம் தான், மேலும் இப்படத்தில் சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும், இதுதான் என்னுடைய வாழ்க்கை என நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் நிறைய வெற்றியை பார்த்தவர் நான் எதுவுமே இன்னும் பார்க்கவில்லை, அதனால் அப்படியே அவரிடம் சரண்டர் ஆகிவிட்டேன் இனி நடப்பதை எதிர்பார்த்து கடவுள் மேல் பாரத்தை வைத்து விட்டேன்" என்றார்

Next Story

“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.