Skip to main content

ஆம்புலன்ஸுக்கு ஏன் தனி செயலி இல்லை..? - நடிகர் அபி சரவணன் கேள்வி!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
abi saravanan

 

சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் நடிகர் அபி சரவணன் 108 ஆன்புலன்ஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி.. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்.. அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு.. ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸுக்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு...

 

பாரதபிரதமர் உயர்திரு. நரேந்திரமோடிஜீ அவர்கள்

 

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் அவர்கள்

 

தமிழக முதல்வர் உயர்திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

 

தமிழக சுகாதாரதுறை அமைச்சர் உயர்திரு. விஜயபாஸ்கர் அவர்கள்

 

தமிழக அரசு தலைமைச் செயலர் உயர்திரு.சண்முகம்

 

சுகாதாரத்துறை செயலர் திரு .ராதா கிருஷ்ணன் அவர்கள்

 

மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதர துறை உயரதிகாரிகள் முக்கியமாக

 

அனைத்து மீடியா பத்திரிகை செய்தி ஔிபரப்பு நிறுவனங்களுக்கும் அனைவருக்கமானது...

 

நமது இந்தியாவில்  அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ் உள்ளது... "108" என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும்.. உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில். அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும்வரை காத்திருந்து காயம்பட்டவரை மருத்துவமனை அழைத்துச் சென்று இருக்கிறேன். இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் எழுதுகிறேன்.. தவிர யாரையும் எந்தத் துறையும் குறை கூறுவதற்காக அல்ல... Medicalஅவசர தேவை என்றவுடன் #108 நம்பருக்கு போன் செய்தவுடன்  நம்மைத்தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ் கால் சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது, எந்த மாவட்டம்... எந்த தாலுகா... என்ன தெரு என்பதைத் தெளிவாக  கேட்கிறார்கள்... இ்ன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது...

 

எனது மனதில் தோன்றிய எண்ணம்... அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா... இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது. எனவே எந்த எண்ணில் இருந்து அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து  மற்றும் அல்லது லேண்ட் போனாக இருந்தால் ஜி.பி.எஸ். வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை  துல்லியமாக ஏன் அந்தப் பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு வண்டியில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிவிக்கக்கூடாது? இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படலாம் அல்லவா.?

 

உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது.. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும்... ஏனெனில் கண்முன்னே ஓர் உயிர் போராடிகொண்டிருக்கும் போது தாலுகா.. வட்டம் பகுதி என விலாவரியாக அனைவராலும் தெளிவாகக் கூறமுடியாது.... அல்லவா... தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்... அல்லது இந்த முறை சாதாரண கால் டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு  மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸுக்கும் இது நிச்சயம் சாத்தியமே... மேலும் கோவிட் நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலிீஸ் தீயணைப்பு போன்றவைகளுக்கு தனிச்செயலியை அனைத்து மொபைலிலும் கட்டாய  செயலியாக அறிமுகபடுத்தலாமே.. இது எனது எண்ணம் மட்டுமே... இதைச் செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே..?

 

மனவலிகளுடன்
நடிகர் அபிசரவணன்..''

 

எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்