Skip to main content

நண்பர்களிடம் பந்தா காட்ட மகன் செய்த செயல்; வருந்திய அம்மா - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :46

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
asha bhagyaraj parenting counselor advice 46

வீட்டுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து சிறுவனுக்கு  கொடுத்த  கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

பையன் வீட்டுக்கு தெரியாமல் ரூ.5,000 பணத்தை எடுத்துக்கொண்டதாக பேரண்ட்ஸ் என்னிடம் வந்தார்கள். 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த பையனை தனியாக அழைத்து அந்த விஷயத்தை சொல்லாமல் அம்மாவிடம் தான் பிரச்சனை இருக்கிறது என்று பேச ஆரம்பித்தேன். நிறைய விஷயத்தை பற்றி பேசினாலும், எதற்குமே ஓபன் அப் ஆகவே இல்லை. உன்னை பற்றி பெஸ்ட் 5 திங்ஸ் என்ன என்று எழுத சொன்னதற்கு, அவன் ஸ்போர்ட்ஸை பற்றி எழுதினான். ஸ்போர்ட்ஸில் நிறைய இண்ட்ரஸ்ட்டாக இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன். தான் நன்றாக தான் இருப்பதாக சொன்னான். வீட்டுக்கு தெரியாமல் ஏதாவது செய்தாயா? என்று கேட்டதற்கு அவனும் ஒப்புக்கொண்டு 2,000 பணத்தை வீட்டுக்கு தெரியாமல் எடுத்திருப்பதாகச் சொன்னான். நண்பர்களிடம் பந்தா காட்ட தான் இந்த பணத்தை எடுத்துக்கொண்டதாகச் சொன்னான். அந்த பணத்தை அவன் செலவும் செய்யவில்லை. ஸ்கூலில் நண்பர்கள் அவர்களுடைய ஐ - போன், பேக் எடுத்து வந்து பேசுவதால் தானும் பந்தா காட்டுவதற்கு இந்த பணத்தை எடுத்துகொண்டதாக சொன்னான்.

தான் செய்வது தான் சரி என்ற மனநிலை இருந்தால், எந்த குழந்தையும் அடுத்த லெவலுக்கு போகவே முடியாது. இந்த பையனிடம் நான் பேசியதில், இந்த மனநிலை அவனுக்கு நிறையவே இருக்கிறது என்பதை கண்டுபிடித்தேன். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்ன ஆக்டிவிட்டி கொடுத்தாலும், அது சரிவராது. அதனால், அவனுக்காகவே சுய உணர்தல் வர வேண்டும். குடும்ப சூழ்நிலை, மாத வருமானம், செலவு கணக்குகள் ஆகியவற்றை பற்றி மூன்று பேரும் சேர்ந்து பேச வேண்டும் என்று பேரண்ட்ஸிடம் சொன்னேன். தங்களிடம் உள்ள பிரச்சனைகளை வீட்டுக்கு வந்து ஒன்றாக சேர்ந்து பேச வேண்டும் என்றேன். இப்படி பேசும்போது, அந்த குழந்தை தானாகவே உணர ஆரம்பிக்கும். அவனுக்கு சுய ஒப்பீடு வர வைக்க வேண்டும். குழந்தை பெயிலியர்ஸ் பார்க்க வேண்டும். அப்போது தான், அனுபவத்தை கற்றுக்கொண்டு அவனுடைய திறமையை அவன் பார்க்க முடியும்.  அதனால், இந்த பையனை ரியல் டைம் இன்ஸிடெண்டில் நிற்க வைக்குமாறு கூறினேன். 

அவனால் எவ்வளவு மார்க் எடுக்க முடியும் என்று அவனிடம் கேட்டுக்கொண்டு டெஸ்ட் வையுங்கள், அப்போது தான் அவனால் செஃல்ப் கம்பேரிசனை புரிந்துகொள்ள முடியும் என்றேன். இந்த கவுன்சிலிங் இன்னமும் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் புரிய வைத்த பிறகு தான், வீட்டுக்கு தெரியாமல் பந்தா காட்டுவதற்கு பணத்தை எடுத்துக்கொண்ட விஷயத்தை பற்றி என்னால் பேசவே முடியும். அதே நேரத்தில், வீட்டில் போடும் பட்ஜெட்டை குழந்தைகள் முன்னாடி போடுமாறு பேரண்ட்ஸிடம் கூறி வருகிறேன்.