Skip to main content

ஆஸ்திரேலியா களமிறங்கும் கிரிக்கெட் தொடர்! - வர்ணனை செய்யும் வார்னர்!!

Published on 10/06/2018 | Edited on 10/06/2018

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் மூலம் தடையில் உள்ள டேவிட் வார்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

warner

 

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகியோர் சிக்கினர். மேலும், இதில் முக்கியப்புள்ளியாக செயல்பட்ட டேவிட் வார்னரும் குற்றவாளியாக சிக்கினார். இம்மூவரில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு மற்றும் பேன்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. தற்போது தடையில் இருக்கும் இவர்கள் கனடாவில் நடக்கும் உள்ளூர் போட்டியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
 

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சேனல் 9க்காக டேவிட் வார்னர் வர்ணனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 

ஜஸ்டின் லேங்கர் பயிற்சியாளராக, டிம் பெயின் கேப்டனாக பொறுப்பேற்று மாறுபட்ட ஒரு ஆஸ்திரேலிய அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து உடன் நடக்கவிருக்கும் இந்தத் தொடர் வருகிற ஜூன் 13ஆம் தேதி தொடங்குகிறது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இரண்டாவது போட்டியில் இருந்து வார்னர் வர்ணனை செய்யவுள்ளார்.