Skip to main content

டிக்ளர் செய்த கேப்டன்... ஆத்திரத்தில் பேட்டை தூக்கி எறிந்த ஸ்டார்க்!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Mitchell Starc

 

அணி கேப்டன் டிக்ளர் அறிவித்ததால், சதமடிக்கும் வாய்ப்பை இழந்த அதிருப்தியில் பெவிலியன் திரும்பிய மிட்சல் ஸ்டார்க் பேட்டை தூக்கி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ஷெஃபீல்ட் கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ்மேனியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் மிட்சல் ஸ்டார்க் நடந்து கொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பின் வரிசையில் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணி வீரர் மிட்சல் ஸ்டார்க், 132 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 86 ரன்களுடன் களத்தில் நின்றார். அணியின் மொத்த ரன்களானது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 522 ரன்களாக இருந்தது. தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்ய இன்னும் 16 ரன்களே தேவை என்ற எதிர்பார்ப்புடன், மிட்சல் ஸ்டார்க் களத்தில் நிற்க, அணி கேப்டனான நெவில், டிக்ளர் செய்வதாக அறிவித்தார். தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழந்த அதிருப்தியில், பெவிலியன் திரும்பிய ஸ்டார்க், தன்னுடைய பேட்டையும், கையுறையும் தூக்கி எறிந்தார். மிட்சல் ஸ்டார்க்கின் இந்தச் செயலானது அங்கிருந்த கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.