Skip to main content

மழை ஆடும் ஆட்டம்! இந்தியா vs இங்கிலாந்து 

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
lords

 

 

 

இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கவிருந்த இந்தப் போட்டி மழை குறுக்கிட்ட நிலையில் தடைப்பட்டது. அதனால், இரண்டாவது நாளான இன்று 30 நிமிடத்திற்கு முன்பாகவே ஆட்டமானது தொடங்கியது. 
 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யப் பணித்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் சில மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்கினர். ஏற்கெனவே மழையால் நன்கு நனைந்திருந்த பிட்சில், பந்து வேகத்தை எட்டவில்லை. 
 

அதேபோல், ஆண்டர்சனின் பந்துவீச்சும் மிரட்டலாக இருந்தது. அவர் வீசிய முதல் ஓவரின் ஐந்தவாது பந்திலேயே தொடக்க வீரர் முரளி விஜய் பவுல்டாகி பெவிலியன் திரும்பினார். அதேபோல், அடுத்த சில ஓவர்களில் கே.எல்.ராகுலும் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போதைய நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 

 

 

ஏற்கெனவே ஒரு முழுநாள் ஆட்டம் மழையால் வீணானது. அதேபோல், இன்றைய ஆட்டமும் தொடக்கத்திலேயே தடைப்பட்டு மதிய உணவு இடைவேளை வரை நின்றுபோனது. முழுமையாக மூன்று நாட்கள் ஆடினால் மட்டுமே போட்டியின் முடிவு என்பது தெரியவரும் என்பதால், ஆட்டம் இப்போதே கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் இந்திய அணியை மழை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.