Skip to main content

உலகக்கோப்பையில் சூதாட்ட முயற்சி? - விசாரணையில் சிக்கிய உமர் அக்மல்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது தன்னை சூதாட்டத்தில் ஈடுபடுத்த சிலர் முயற்சித்ததாக கூறி, வம்பை விலைக்கு வாங்கியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல். 
 

akmal


 

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மெனுமான உமர் அக்மல், அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையின் லீக் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன்பாக சில சூதாட்டக்காரர்கள் என்னை அணுகி, 2 பந்துகளைத் தவறவிட்டால் ரூ.1.36 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகக் கூறினார்கள். ஆனால், அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன் என பேசியிருந்தார். 
 

இதுபோன்ற சூதாட்ட முயற்சிகள் தங்களை நோக்கி எழும்போது, அதுகுறித்து உடனடியாக கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் தொடர்புடைய கிரிக்கெட் வாரியத்தில் முறையிட வேண்டும். ஆனால், இதுகுறித்து உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எந்தப் புகாரையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில், சூதாட்டம் சார்ந்த இந்தக் குற்றச்சாட்டு குறித்து உமர் அக்மலுக்கு நோட்டீஸ் அனுப்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவர் விசாரணையில் கலந்துகொண்டு பதிலளிக்கவும் வலியுறுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சம்பவம் குறித்து பொதுவெளியில் உமர் அக்மல் கூறிய கருத்து, இன்று அவருக்கே விணையாக திரும்பியிருக்கிறது.