Skip to main content

இந்தியா vs நியூசிலாந்து! - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுவதில் சிக்கல்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

india vs nz wtc final

 

டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் மீண்டும் கொண்டுவரப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் திட்டமிட்டபடி இந்த இறுதிப்போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியாவை இங்கிலாந்து தனது ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வசிக்காதவர்களோ, பிரிட்டிஷ் குடிமக்களாக இல்லாதவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்கக் கூடாது. 

 

இதனால் இந்திய அணி, இங்கிலாந்து சென்று விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேநேரம் சர்வதேச கிரிக்கெட் வாரியம், ரெட் லிஸ்ட்டில் நாடுகள் இருப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து இங்கிலாந்து அரசுடன் பேசி வருவதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


 

Next Story

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Born in New Zealand is New Year People flooded with happiness

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதனையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.