Skip to main content

இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டி! : இன்று தொடக்கம்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

இந்தியா மற்றும் அயர்லாந்தி அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
 

indian

 

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் வைத்து தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டியின் நேரலையை இரவு 8.30 மணி முதல் காணலாம்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, தோனி, ராகுல் உள்ளிட்ட பலம்வாய்ந்த வீரர்களும், இளம் பந்துவீச்சாளர்களும் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் விறுவிறுப்பில் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம். அதேபோல், அயர்லாந்து அணி கேரி வில்சன் தலைமையில் களமிறங்குகிறது. தி வில்லேஜ் மைதானத்தின் சராசரி ரன்களே 125 தான் என்பதால், பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என நம்பலாம்.