Skip to main content

“என் மீதான புகாரில் உண்மையில்லை” - ரூபி. மனோகரன் விளக்கம்!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
There is no truth in the complaint against me Ruby Manokhar's explanation

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் நேற்று முன்தினம் (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இத்தகை சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயக்குமாரின் இந்த கடிதம் இதுவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாராக எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

There is no truth in the complaint against me Ruby Manokhar's explanation

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “நானும் ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவோம். ஜெயக்குமாரின் மரணம் எனக்கு தனிப்பட்ட இழப்பு. அதுமட்டுமின்றி கட்சிக்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும். எனக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே எந்த வரவு செலவும் நடக்கவில்லை. என் மீதான புகாரில் உண்மையில்லை. அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டுள்ளது. வழக்கில் என்னை சிக்கவைக்க வேண்டுமென்றே யாரோ சதி செய்வது போல் தெரிகிறது. இந்த கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி போல பழகினோம். எங்கள் இருவருக்கும் இடையில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். எனக்காக ஜெயக்குமார் பாடுபட்டவர்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்