Skip to main content

எடுபடாத குல்தீப் மேஜிக்.. இங்கிலாந்து ஃபீல்டு ஒர்க்.. போராடித் தோற்ற இந்தியா!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

ஓல்டு ட்ரஃபோர்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கிடைத்த அபார வெற்றிக்குப் பின், அசால்ட்டாக களமிறங்கிய இந்திய அணிக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி.
 

Dhoni

 

 

 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வுசெய்ய, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான் ஏமாற்ற, சென்ற போட்டியில் சதமடித்து அசத்திய ராகுலும் கிளீன் பவுல்டாகி பெவிலியன் திரும்பினார். கோலி, ரெய்னா மற்றும் தோனியின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்தது. 
 

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்களும் தொடக்கத்தில் சொதப்ப, அலெக்ஸ் ஹேல்ஸின் நிதானமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில், புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி வெற்றியை சுலபமாக்கினார் ஹேல்ஸ். இதன்மூலம், இங்கிலாந்து அணி 1 - 1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. முந்தைய போட்டியில் அசால்ட்டு காட்டிய குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் பெரிதாக ஒன்றும் எதிரணி வீரர்களை சோதிக்கவில்லை. இதற்கு அந்த அணியின் ஃபீல்டு ஒர்க்கே காரணம் எனலாம். ஒருவழியாக வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று, தொடரின் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது. கார்டிஃபில் நடக்கும் மூன்றாவது போட்டி தொடரை வெல்வது யார் என்பதைத் தீர்மானிக்கும்.