Skip to main content

ஆசிய கோப்பையில் இருந்து ஹர்தீக் பாண்டியா வெளியேறினார்! 

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

காயம் காரணமான இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்டியா ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். 
 

Hardik pandya

 

 

 

ஆசிய கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஹாங்காங் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் களமிறங்காத பும்ரா மற்றும் ஹர்தீக் பாண்டியா ஆகியோர் பாகிஸ்தான் போட்டியில் சேர்க்கப்பட்டனர். அப்போது பந்துவீசிய பாண்டியா, தனது 4.5-வது ஓவரில் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். 
 

 

 

தொடர்ந்து வலியால் துடித்த அவரால் எழுந்து நிற்க முடியாததால், மருத்துவ உதவி மூலம் மைதானத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பாண்டியா தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் எழுந்து நிற்பதாகவும், இருப்பினும் விளையாடும் நிலையில் இல்லை என்றும் மருத்துவர்குழு தெரிவித்தது. இதையடுத்து, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஹர்தீக் பாண்டியா வெளியேறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 

அவருக்கு பதிலாக தீபக் சகார் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல், காயம் காரணமாக அவதியுற்ற அக்சர் படேலுக்கு பதிலாக ரவீந்திர ஹடேஜாவும், ஷ்ரதுல் தாகூருக்கு பதிலாக சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.