மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்தாக இலங்கையுடன் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில் இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா, ரோகித் சர்மா தலைமையில் கே.எல் ராகுல், பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோர் அடுத்த கேப்டனாக உருவாக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேத்தன் சர்மா கூறுகையில், “தென்னாப்பிரிக்காவில் கே.எல் ராகுலை கேப்டனாக்கினோம். பும்ராவை தென்னாப்பிரிக்காவிலும், இலங்கை தொடரிலும் துணை கேப்டனாக இருந்தார். மேற்கு இந்திய தீவு போட்டிகளில் ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருந்தார். இவர்கள் மூவரும் ரோகித்தின் கீழ் கேப்டனாக உருவாக்கப்பட இருக்கிறார்கள். அடுத்த கேப்டன் யார் என்று சொல்வது கடினம்தான். ஆனால் ஒருவர் கேப்டனாக உருவவார் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.