Skip to main content

இடம் மாறலாம், ஆனா தடம் மாறல... CSK போடும் ஆட்டம்! 

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

ஐபிஎல்-2018 கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கு. தமிழ்நாட்டுல இருந்துகொண்டு கிரிக்கெட் பத்தி பேசுனா இப்போ நம்மள எப்படி பார்ப்பாங்கனு கவலைப் படும் ஒரு சூழல் இருக்கு. காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனைனு என்று போராட்ட களமாக தமிழ்நாடு இருப்பதால் கிரிக்கெட் ஆட்டக்களத்தை மாற்றிக்கொண்டது ஐ.பி.எல். ஆனாலும் அங்கும் நம்ம தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் உடைய ஆட்கள் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

dhoni and team



சென்னை அணியோ வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. நம்ம ஆட்கள் ரவி அஸ்வின், தினேஷ் கார்த்திக் கேப்டன் ஆக இருக்கும் அணிகளும் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. நான்காவதாக சன் ரைசர்ஸ் அணி, அதுவும் ஒரு வகைல சென்னைக்கு சொந்தம். நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி கவலைப் படாத தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கொஞ்சம் சந்தோசப்பட இந்த செய்தி.
 

நம்ம ஆட்கள் என்ன நடந்தாலும் பரவாயில்லைனு புனேக்கு ட்ரெயின்ல போயி மேட்ச் பார்த்துட்டு வர்றாங்க. என்னா ஒரு வெறித்தனம்..? சென்னை அணி சார்பா சென்னையில் இருந்து  ஒரு ட்ரெயின் விட்டாங்க. ரயிலேறி கிரிக்கெட் பாக்கப் போனவர்களை வாட்சன் 100 அடிச்சு குஷிப்படுத்தி  பண்ணி அனுப்பிச்சுட்டார். அடுத்த மேட்ச்ல அம்பத்தி ராயிடு சும்மா 'பொள பொள'னு பொளந்து ஹைதராபாத் அணியுடன் வெற்றி பெற உதவினார்.

 

csk fans in train


நம்ம சென்னை அணிக்கு,  ஒவ்வொரு மேட்ச்லயும் ஒரு ஹீரோ அடிக்குறார். முதல் மேட்சில் பிராவோ தொடங்கி அடுத்து பில்லிங்ஸ், தோனி, வாட்சன், ராயுடு என்று  ஜொலித்தனர். அடுத்து கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோத உள்ளது சென்னை அணி. இந்தப் போட்டியில் யார் ஹீரோ என்று பார்ப்போம்.

 

dhoni with ashwin


விராட், ABD போன்ற வீரர்கள் இருந்தும் பெங்களூரு அணியால் பெரிதாய் இன்னும் சாதிக்க முடியவில்லை. இரண்டு வெற்றி இரண்டு தோல்விகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

virat


பெங்களூரு அணிக்கு ABD தவிர்த்து யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக ஆடினால் சென்னையின் வெற்றியைத் தடுக்கலாம், இல்லையேல் தோல்விதான். சென்னை அணிக்கு பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி அவர்களும் தங்கள் ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றுத் தந்தால் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் இந்த முதிர்ந்த சிங்கங்களின் அணி.