Skip to main content

'கோலியை பார்த்து பயப்பட கூடாது' வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் கிலி பேட்டி!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் அளித்த பேட்டியில், " இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட் முக்கியமானது. அவரை அவுட் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அவரை பார்த்து எங்களது பந்துவீச்சாளர்கள் அதிகமாக பயப்படக்கூடாது. தைரியமாக பந்து வீச வேண்டும். கடந்த வருடத்தை விட இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்தியாவை சொந்த மண்ணில் சாய்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல" என பேசியுள்ளார்.

 


 

Next Story

தோனியின் பேச்சைக் கேட்காத ரெய்னா! - அடுத்து நடந்தது என்ன?

Published on 27/02/2018 | Edited on 27/02/2018

தென் ஆப்பிரிக்க அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெடுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது.

 

Dhoni


 

தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய கிறிஸ்டியான் ஜோன்கர் களத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தின் 14ஆவது சுரேஷ் ஓவரை ரெய்னா வீசியபோது, பந்தை ஸ்டம்புகளை நோக்கி வீசவேண்டாம் என தோனி கூறிக்கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளுக்கு அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார். ஆனால், ரெய்னா சரியான இடத்தில் பந்தை வீசமுடியாமல் திணறினார். இதனால், ஜோன்கர் அந்த ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.
 

பொதுவாக இந்திய அணியின் கேப்டன் யாராக இருந்தாலும், தோனி தனது தரப்பு கருத்துகளை முன்வைத்துக் கொண்டே இருப்பார். பல சமயங்களில் அவரது கூற்றுகள் உண்மையாவது உண்டு. டி.ஆர்.எஸ். சமயங்களில் தோனியின் கணிப்பு தவறியதே இல்லை. ஆட்டத்தின் நகர்வுகளை சரியாக கணிக்கும் தோனியின் கருத்துகளை பின்பற்றி பல வீரர்கள் ஆட்டத்தையே மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

திட்டவில்லை.. தட்டி எழுப்பினார்! - தோனியின் கோபம் குறித்து மணிஷ் பாண்டே

Published on 23/02/2018 | Edited on 24/02/2018

தோனி தன்னைத் திட்டவில்லை, தட்டி எழுப்பினார் என இந்திய அணியின் இளம் வீரர் மணிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். 

 

Manidh

 

நேற்று முன்தினம் சென்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்த சந்தித்த மணிஷ் பாண்டே ஒரு ரன்கள் மட்டும் எடுத்து நின்றார். ஆனால், இரண்டு ரன்கள் ஓடவேண்டும் என்று நினைத்த தோனி கடுப்பாகி, மணிஷ் பாண்டேவை அழைத்து கவனம் இங்கே இருக்கட்டும் என கடுமையான வார்த்தைகளால் திட்டினார். 

 

இதுகுறித்து ஆட்டம் முடிந்த பின் பேசிய மணிஷ் பாண்டே, ‘வெளிப்படையாக பேச வேண்டுமானால், அணியில் வாய்ப்புகளுக்காக காத்திருப்பது கடினமாக இருக்கிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க தொடரில் மனச்சஞ்சலம் மிகவும் அதிகம். அணியில் திறனும், அனுபவமும் கொண்ட வீரர்கள் இருக்கும்போது நமக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் என்பது புரிகிறது. 4ஆம் இடத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சமயங்களில் 5ஆம் இடத்தில் இறங்க பணிக்கப்படுகிறேன். ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடவேண்டும். இதைத்தான் முதல் போட்டியில் செய்தேன்; முடியாமல் போனது. தோனி சிறந்த அனுபவமுள்ள வீரர். அவர் என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறார். நடந்து முடிந்த போட்டியில் தோனி சிறப்பாக ஆடினார். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அவரது ஆக்ரோஷமான விளையாட்டு யாவரும் அறிந்ததே. 170 ரன்கள் எடுத்தால் போதும் என்றே நினைத்தோம். ஆனால், கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்துவிட்டார்’ என்றார்.