உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆனது குறித்து முதன்முறையாக தோனி மனம் திறந்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதுகுறித்து பேட்டியளித்த தோனி, "என் முதல் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். அதேபோல இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அப்போது "நான் ஏன் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்கக்கூடாது" என எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொண்டேன். அந்த 2 இன்ச்கள் இடைவெளி... நான் ஏன் டைவ் அடிக்கவில்லை, நிச்சயமாக நான் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்க வேண்டும்" என தெரிவித்தார்.