Skip to main content

குழந்தையாக மாறிய குட்டி யானை... சறுக்கி விளையாடி சேட்டை!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


கரோனா அச்சத்தில் உலகமே இருக்கும் நிலையில், இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி வருகின்றது. எவ்வளவு பெரிய உயிரினமாக இருந்தாலும் அதற்குள்ளும் குழந்தைத்தனமான சேட்டைகள் புதைந்திருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக அந்த வீடியோ உள்ளது.

 


காட்டில் எடுக்கப்பட்டுள்ளதை போன்று தோற்றமளிக்கும் அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று தவழ்ந்து சென்று உயரமான பகுதியில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கி சறுக்கி விளையாடுகிறது. அவ்வாறு சறுக்கிச் செல்லும் போது அந்த குட்டி யானை மகிழ்ச்சியில் குதூகளிக்கிறது. இந்த வீடியோ இணையதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. 
 

Next Story

வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Wild elephants entering the city from the jungle!

 

சத்தியமங்கலத்திற்கு அருகே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து 100- க்கும் மேற்பட்ட வாழை மரங்களைச் சேதப்படுத்தியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள், உணவுக்காக அருகில் இருக்கும் ஊர்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள், கீழ்பவானி வாய்க்காலைக் கடந்து தொண்டம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தன. 

 

மாணிக்கம் என்பவரது விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி மற்றும் இரும்பு கேட்டைச் சேதப்படுத்திய காட்டு யானைகள், விவசாயி பன்னீர்செல்வம் என்பவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 100- க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்தனர். இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலியை எழுப்பியும், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 

வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதைத் தடுக்க, ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த அகழியை, மேலும் ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

Next Story

அணி வகுத்து சென்ற காட்டு யானை கூட்டம்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Wild elephant herd of team!

 

ஓசூர் அருகே கெலமங்கலம் சாலையில் 20- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் கடந்து சென்றனர்.இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் தூரத்தில் இருந்து கண்டு ரசித்தனர்.  


காட்டு யானைகள் சாலையைக் கடக்கும் போதும், இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர், விளைநிலங்கள் வழியாக வீறு நடை போட்டு சென்ற காட்டு யானைகள், வனப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். அப்போது, இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல், அங்குள்ள மின்சார கோபுரம் மீது ஏறி நின்று காட்டு யானைகள் விளைநிலங்கள் வழியாகச் செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்தனர்.