Skip to main content

39 ஆண்டுகளாக காதலிக்கு சாக்லேட் கொடுக்கும் காதலர்!

Published on 14/02/2018 | Edited on 15/02/2018
ron

காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி  உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று பல காதல்கள் துளிர்க்கும், சில காதல்கள் உதிரும். ஆனால் காதலித்து கரம் பிடித்தவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  அந்த அற்புதம் நிகழ்ந்த நாளை நினைவுகூர்ந்து ஒரு அழகான உரையாடலும், பரிசு பரிமாற்றமும் இருக்கும். இதனை எத்தனை பேர் பின்பற்றுவார்கள் என்பது தெரியாது.  

ron

ஆனால்  நியூமெக்ஸிக்கோவைச்  சேர்ந்த  ரான் மற்றும் டோனா காதல் தம்பதி இணைந்து 39வது காதலர் தினத்தை ஆரம்பத்தில் இருந்த அதே காதலோடு கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 1979ஆம் ஆண்டு ஆல்புகெர்க்கியில் ஒரு இன்ஸுரன்ஸ் அதிகாரியாக ஒரு வீட்டு கதவைத் தட்டிய போது ஒரு பெண் கதவைத் திறந்தார். அந்தப் பெண்தான்  டோனா. அத்தருணம் இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக மாறியது. அதன் பின் இருவரும் காதலர் தினம் அன்று சந்தித்து பேசியபோது ரான், "உனக்கு சாக்லேட் பிடிக்குமா?" என்று கேட்க, "ஆம், எனக்கு டார்க் சாக்லேட் மற்றும்  பஃப்பெட்ஸ் கேண்டி என்றால் ரொம்ப பிடிக்கும்" என்று சொன்னவுடன் அன்று முதல் 39 ஆண்டுகளாக காதலர் தினத்தன்று டார்க்  சாக்லேட்டை அதே கடையில் வாங்கி டோனாவிற்கு  பரிசளித்து வருகிறார் ரான். 

2014ஆம் ஆண்டு டோனாவிற்கு டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டு இருந்தபொழுது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தன் காதலி இருந்த நிலையை கண்டு வருந்தினார் ரான் . "2015 ஆம் ஆண்டு  அவள் மீண்டும் வீட்டிற்கு வந்தாள். ஆனால் அவளால் எழுத முடியவில்லை, பேச முடியவில்லை, அவளால் அன்று கழிவறைக்கூட செல்லமுடியவில்லை. அது தான் என் வாழ்வில் சோகமான நாளாக இருந்தது" என்கிறார் ரான் . இது பற்றி டோனா கூறியபோது, "என்னைப் பாதுகாப்பவர் இவர். நான் இவரை திருமணம் செய்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரை நான் காதலிக்கிறேன்" என்கிறார். 

இதுமட்டுமல்லாமல் தற்போது இந்த காதலர் தினத்திற்கு ரான் டோனாவுக்கு  பரிசு வாங்கி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

Next Story

இணையதள காதல்; இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - பகீர் பின்னணி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
young woman who cheated a young man by falling in love through the Internet

டெல்லியில் சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் வெர்ஷா என்ற பெயர் கொண்ட ஐடியில் பெண் ஒருவர் பேசி பழகியுள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டு பழகி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெர்ஷா தனக்கு பிறந்தநாள் என்று தன்னுடன் டின்டர் ஆப்பில் பழகி வந்த போட்டித்தேர்வாளரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் வாழ்த்து தெரிவிக்க, இருவரும் சந்தித்து பிறந்த நாள் கொண்டாடலாம் என்று காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளரும் சம்மதம் தெரிவிக்க, விகாஸ் மார்க்கில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் இருவரும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அப்போது, வெர்ஷாவிற்கு போட்டித்தேர்வாளர் ஸ்நாக்ஸ், ஆல்கஹால் சேர்க்காத பானங்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மதிப்பு சில ஆயிரங்கள் தான் இருக்கும். ஆர்டர் செய்த உணவு டேபிளுக்கு வர இருவரும் பேசிக்கொண்டு உணவருந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது, திடீரென வெர்ஷா தனது குடும்பத்தில் பிரச்சனை என்று கூறி டேட்டை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். உடனே, அவசரம் என்பதால் வெர்ஷாவை அனுப்பி வைத்த போட்டித்தேர்வாளர் கஃபேவில் பில் செலுத்த சென்றுள்ளார். 

அப்போது, 1.2 லட்சத்திற்கான பில்லை பிளாக் மிரர் கஃபே நிர்வாகத்தினர் கொடுத்ததைப் பார்த்து அதிர்ந்துபோனவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், கஃபே நிர்வாகத்தினர் பணத்தை செலுத்தாமல் இங்கிருந்து நகர கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோனவர் வேறுவழியின்றி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்தான் மிகப்பெரிய மோசடி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவம் நடைபெற்ற பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் சேர்ந்து நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட போட்டித்தேர்வாளரிடம் டிண்டர் ஆப் மூலம் டேட் செய்த வெர்ஷா என்ற பெண்ணும் இவர்களின் கூட்டாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். பிளாக் மிரர் கஃபேவில் மேலாளராகப் பணிபுரியும் ஆர்யன் என்பவர் வெர்ஷாவை, டிண்டர் செயலி மூலம் போலியான கணக்கை உருவாக்கி சிவில் தேர்விற்கு படித்து வந்த போட்டி தேர்வாளரை மோசடி வலையில் வீழ்த்தி பணத்தை ஏமாற்றியுள்ளார். அதுபோல, வெர்ஷாவின் உண்மையான பெயர் அஃப்சான் பர்வீன் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். 

இந்த மோசடி கும்பலானது டிண்டர் ஆப் மூலம் இளைஞர்களை டேட்டிங் வரவழைத்து மோசடி செய்து வந்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை வெர்ஷாவிற்கு15 சதவிகிதமும், உதவும் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் 45 சதவிகிதமும், மீதமுள்ள 40 சதவிகிதம் கஃபே உரிமையாளர்களுக்கும் பிரித்துக்கொண்டு ஏமாற்றியது போலீஸ் விசராணையில் தெரியவர போலீசார் மோசடியில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். ஆனால், வெர்ஷா தப்பித்த நிலையில், போலீசார் அவரை தீவிரமாக் தேடினர். அவர், ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

காதல் தோல்வி; இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
young man lost his life due to love failure

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விஸ்வநாதன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் காணப்பட்ட விஸ்வநாதன் நேற்று வீட்டின் அருகில் உள்ள தென்னூர் மீனாட்சி அம்மன் தோப்பில் கொட்டகையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விஸ்வநாதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.