Skip to main content

தலைமுடியை இப்படிக் கழுவினால் உதிராது - சித்த மருத்துவர் லட்சுமி கீதா விளக்கம்!

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

DrLakshmi geetha | Siddha | Hairfall | Hairgrowth

 

தலைமுடி பராமரிப்பு குறித்து சித்த மருத்துவர் லட்சுமி கீதா விரிவாக எடுத்துரைக்கிறார்

 

அனைவருக்கும் அழகைக் கொடுப்பது தலைமுடி. கரிசலாங்கண்ணியால் செய்யப்படும் தைலம் தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். இப்போது நாம் அதிகமாக ஷாம்பூ பயன்படுத்துகிறோம். அதிகமான கெமிக்கல் உள்ள ஷாம்பூவை பயன்படுத்தும்போது அது தலைமுடியை பாதிக்கிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் ஏற்படும். சின்ன வெங்காயத்தின் சாறை தலையில் தேய்க்கும்போது முடி உதிரும் பிரச்சனை சரியாகும். ஷாம்பூ பாக்கெட்டை பிரித்து அப்படியே பயன்படுத்தாதீர்கள். 

 

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டு அதன் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. தேங்காய் எண்ணெய் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும். வாரத்துக்கு இருமுறையாவது நிச்சயம் தலைக்கு குளிக்க வேண்டும். தலை என்பது உடலின் மிக முக்கியமான ஒரு பகுதி. சித்த மருத்துவத்தில் பல வகையான எண்ணெய்கள் முடி உதிராமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான சூடு இருக்கும்போது சந்தனாதி தைலம், பித்தம் அதிகமாக இருக்கும்போது சுக்கு தைலம், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும்போது பொன்னாங்கண்ணி தைலம், இளநரை இருக்கும்போது கரிசலாங்கண்ணி தைலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 

 

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதாலும் முடி உதிர்தல் ஏற்படும். குடலில் கிருமிகள் அதிகம் இருந்தாலும், தூக்கமின்மை இருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும். சித்த மருத்துவத்தின் மூலம் உங்களுக்கு நிச்சயம் இதற்கான நல்ல தீர்வு கிடைக்கும். பலருக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கும். வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு குளித்தாலே பேன் வராமல் தடுக்கலாம். கோழி முட்டையில் வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து, அதை தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்தால் முடிக்கு நிறைய சத்து கிடைக்கும். 

 

செம்பருத்தி இலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை அரைத்து, துணியில் கட்டி பிழிய வேண்டும். அந்த சாறை தலையில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இது முடி கொட்டுவதை தடுப்பதற்கான மிகச்சிறந்த தீர்வாக அமையும்.