Skip to main content

"தேவைதான் புதிய புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகிறது என்பதற்கு இந்த கொரோனா வைரசும் விதி விலக்கல்ல.."

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

எந்த நிமிடம் போர் வந்தாலும் அதை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும் நாடுகள் கூட வைரஸ் நோய்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லை. மனித இனத்தை அச்சுறுத்துவது ஆயுதங்கள் இல்லை கிருமிகள்தான்.  - பில் கேட்ஸ் .

 

fg



சொத்து பணம் கார் பங்களா  என்று அனைத்து வசதிகள் இருந்தாலும் கொரோனா மட்டும் வந்தால் கட்டிய மனைவியோ பெற்ற பிள்ளையோ கூட அருகில் வர முடியாது . யாரும் ஈமச் சடங்குகள் செய்ய முடியாது . அனைவரும் பயந்து ஒடி விடுவார்கள்.  எவரோ  யாரோ ஒரு மனிதன் நம்மை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நம் பிணத்தின் மீது மருந்தடித்து ஏதோ ஒரு குழியில் போட்டு புதைத்துவிட்டு போவான் , அல்லது எரித்து விட்டு போவான். இன்று இதுதான் பல நாடுகளிலும் நடக்கிறது. நாளையும் தொடரும் என்ற அச்சம் பெரும்பாலான மக்கள் மனதில்.

இந்த லட்சணத்தில் திமிர், தலைக்கனம், பந்தா, பொறாமை, புறம்பேசுதல், கெடுக்க நினைப்பது, ஸ்டேட்டஸ், கவுரவம், ஜாதி தராதரம் பார்ப்பது,பழி உணர்வு, டம்பம், கர்வம், தற்புகழ்ச்சி, கடுஞ்சொல் என தீய குணங்கள். பாவத்த! .... பேரழிவுகள் வரும் சூழலில் மட்டுமே மனிதன் ஓன்று படுகிறான். இங்கு உயிர்களை காப்பாற்றும் மருத்துவம் உயிர்களைக் கொல்லும் நோய்க் கிருமிகள் மூலமாகவே இதுவரை வளர்ந்துள்ளது.

தேவைதான் புதிய புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகிறது என்பதற்கு இந்த கொரோனா வைரசும் விதி விலக்கல்ல. அறிவியலாளர்கள் மிக விரைவில் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பார்கள். மக்கள் நலம் பெறுவார்கள்.