Skip to main content

இன்றைய ராசிபலன்-26.09.2024

Published on 25/09/2024 | Edited on 26/09/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

26-09-2024, புரட்டாசி 10, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 12.26 வரை பின்பு தேய்பிறை தசமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 11.34 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் இரவு 11.34 வரை பின்பு சித்தயோகம். 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசி பலன் -26.09.2024

 mesham

மேஷம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.
 

 reshabam

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் மேலோங்கும்.


kadagam

கடகம்

இன்று எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும்.
 

 5

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
 

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.
 

 thulam

துலாம்

இன்று உறவினர்கள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

 viruchagam

விருச்சிகம்


இன்று உங்கள் ராசிக்கு மாலை 5.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாலை நேரத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.
 

 danush

தனுசு

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு மாலை 5.12 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.


magaram

மகரம்

இன்று உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
 

 kumbam

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.  அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை.

 meenam

மீனம்

இன்று நீங்கள் நினைத்தது நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.