Skip to main content

கடன் வாங்க போலி ஆவணம்....தொழிலதிபருக்கு தூக்கு....

Published on 24/12/2018 | Edited on 24/12/2018

 

பிடுமென்


ஈரான் நாட்டின் பிரபல தொழிலதிபர் ஹமித்ரேசா பக்கெரி தர்மனி,  ‘பிட்டுமென் சுல்தான்’ என்று பலரால் செல்லமாக அழைக்கப்பட்டவர். வங்கியில் கடன் பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து அளித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 
 

ஈரானில் ஆஸ்பால்டை தயாரிக்க பயன்படும் பிட்டுமென் என்னும் பொருளை விற்பனை செய்வது லாபகரமான தொழிலாக உள்ளது. ஹமித்ரேசா இந்த பிட்டுமெனை கொள்முதல் செய்வதற்காகத்தான், போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெற திட்டம்போட்டுள்ளார். இந்த புகாரின்பேரில் இவர் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
 

100 மில்லியன் டாலர் மதிப்பிலான பிட்டுமெனை அவர் மோசடி செய்தும், லஞ்சம் கொடுத்தும் கடன்பெற்று, பின்னர் கொள்முதல் செய்துள்ளார் என்பது இவர் மேல் இருந்த குற்றச்சாட்டு. இந்த வழக்கின் விசாரணை ஈரான் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவர் தூக்கில் போடப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 
 

இதேபோல ஈரானில் கடந்த மாதம் 2 டன் அளவுக்கு தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நாணய சுல்தான் என அழைக்கப்பட்ட தொழில் அதிபர் ஒருவர் தூக்கில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்