Skip to main content

257 ராணுவ வீரர்கள் பலியான விமான விபத்து! - அல்ஜீரியாவில் சோகம்

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துள்ளானதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Plane

 

அல்ஜீரியா நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ளது பவுஃபரிக் விமான நிலையம். இங்கிருந்து 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றுக்கொண்டு தென்மேற்கு அல்ஜீரியாவின் பேகர் பகுதியை நோக்கி புறப்பட்ட ராணுவ விமானம், கிளம்பிய ஓரிரு நிமிடங்களுக்குள் பயங்கர சத்ததுடன் வெடித்துச் சிதறியது. 

 

இந்த வெடிவிபத்தில் தற்போது வரை 257 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிழந்ததாக ரியூட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 14 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த விபத்துக்கான தெளிவான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. கூடுதலாக தகவல் எதையும் தெரிவிக்காத அல்ஜீரிய ராணுவ அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்