Skip to main content

இலங்கையில் உள்ள பெண்கள் "பர்க்காக்கள்" அணிய தடை! - மைத்ரிபால சிறிசேனா

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் இலங்கையில் உள்ள பெண்கள் அனைத்து வகையான பர்க்காக்கள் அணிய தடை விதித்தார். மேலும் அவர் கூறுகையில்  இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் குறி வைத்து தீவிரவாதிகள் வைத்த வெடிக்குண்டுகள் வெடித்தது. சில இடங்களில் தீவிரவாதிகள் தங்கள் உடலில் நிரப்பி இருந்த வெடிக்குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

burqas



எனவே இலங்கையில் ஒவ்வொரு நாளும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வருவதாகவும் , சோதனையின் போது மனித வெடிக்குண்டுகள் வெடிப்பது அதிகரித்து வருவதாக அதிபர் தெரிவித்தார். இந்த தீவிரவாத தாக்குதலை பெண்களின் பங்கும் அதிகமாக இருப்பதால்  , பெண்கள் பர்க்காக்கள் அணிய தடை என்று அதிபர் விளக்கமளித்துள்ளார். அதே போல் இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றத்தில் பெற்றார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. மேலும் இலங்கை ராணுவத்தினர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  இதனிடையே இலங்கை முழுவதும் தீவிர சோதனையில் ராணுவ வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உளவுத்துறை மூலம் அவ்வப்போது இலங்கை அரசுக்கு தீவிரவாதிகள் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மற்றும் "நேஷ்னல் தவ்ஹித் ஜமாத்" உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கு இலங்கையில் தடை விதித்தார்.


பி.சந்தோஷ். சேலம் .
 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.