Skip to main content

கொரோனா வைரஸ் பீதி - மாஸ்கை அதிக விலைக்கு விற்ற மருந்து கடைக்கு 3 கோடி அபராதம்!

Published on 29/01/2020 | Edited on 30/01/2020


நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முகமூடிகளை அதிக விலைக்கு விற்றதாக மருந்து கடை ஒன்றுக்கு மூன்று கோடி ரூபாயை சீன அரசு அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. 



இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகமூடிகளை அனைவரும் அணிந்து வருகிறார்கள். இந்த முகமூடிகள் ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட ஒரு கடையில் இதன் விலை 8700 ரூபாய்க்கு முகமூடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த சீன அதிகாரிகள் அந்த கடைக்கு இந்த ரூபாய் மதிப்பில்  3 கோடி அபராம் விதித்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்