ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏழு பேர் இடம்பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிடும் உலக பணக்காரர் பட்டியலுக்காக பலர் ஆர்வமாகக் காத்திருப்பர். கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இந்தாண்டுக்கான பட்டியல் வெளியானது. தற்போது 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆண்டுகள் தோறும் இப்பத்திரிகைகள் வெளியானாலும், கரோனா அச்சுறுத்தல் மற்றும் பொருளாதரா பாதிப்பு நிறைந்த இந்தச் சூழலில் வெளியானதால் இப்பட்டியல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு இப்பட்டியலில் முன்னணியில் இருந்த பலரது சொத்து மதிப்புகள் தற்போது அதிக பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடி வரை சரிந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் 179 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனர் பில் கேட்ஸ் 111 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் முறையே 'மார்க் ஜூக்பெர்க்', 'வாரன் பஃப்பட்', 'லேரி எல்லிசன்' ஆகியோர் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவாழ் இந்தியர்களான ஜே சவுந்திரி, ரோமேஷ் வத்வானி, நிராஜ் ஷா, வினோத் கோஸ்லா, கவிதாரிக் ஸ்ரீராம், ராகேஷ் கேங்வால், அனில் புஸ்ரி ஆகிய ஏழு பேர் இடம்பிடித்துள்ளார்.