Skip to main content

பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்த ஹபீஸ் சயீத்...

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியாவிலிருந்த பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்தப்போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.

 

fghfghfgh

 

ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் உபயோகப்படுத்தப்படாத உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி, பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் ஆகிய 5 நதிகளின் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு அனுப்பும் நீரை இந்தியா நிறுத்தப்போவதாக தகவல் பரவிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீது பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், "நீங்கள் பேசும்போது நானும் அல்லாவின் அருளால்  பேசுவேன். பாகிஸ்தானுக்கு வரும் நீரை நிறுத்த காஷ்மீரில் அணைகட்டி நீரைத் தேக்கி, அதை எங்களுக்கு இல்லாமல் செய்வீர்களா? எல்லை மீறி நீங்கள் பேசிவிட்டு அதற்கு நாம் பதிலளிக்காமல் மவுனம் காக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் நீர்வரத்தை தடுத்தால் நீங்கள் மூச்சு விடுவதை நான் தடுப்பேன்" என கூறியுள்ளான். இந்த வீடியோ தற்போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, அதற்கு மக்களின் ஆதரவும் அங்கு அதிகரித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்