Skip to main content

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Jeyakumar dhanasingh case Shocking information released

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பகீர் தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம். அவரின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பின்னர் 4 மணி நேரம் கழித்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டு உடல் ஏரிக்கப்பட்டுள்ளது என்ற பகீர் தகவலும் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Old woman incident by pillow; Police investigation

திருப்பத்தூரில் தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அனுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது, மூதாட்டி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அமுக்கி வைக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும்  வேலூர் சாரா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் உறவினர்கள் ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து கைரேகை பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்காயம் அருகே மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.