Skip to main content

அந்நிய முதலீடு செய்வதில் அமெரிக்காவுக்கு ஐந்தாவது இடம்...

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

அந்நிய முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 7% குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2017-2018 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 35.94 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா அந்நிய முதலீடாக பெற்றுள்ளது.

 

FDI

 

அதே இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 33.49 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 7% குறைவு என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இந்த நிதியாண்டில் பெற்ற மொத்த அந்நிய முதலீட்டில் அதிகமான முதலீடு பெற்ற சில துறைகளில் சேவைத் துறை 5.91 பில்லியன் அமெரிக்க டாலர், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 4.75 பில்லியன் அமெரிக்க டாலர், தொலைத்தொடர்பு துறை 2.29 பில்லியன் அமெரிக்க டாலர், ஆட்டோமொபைல் துறை 1.81 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் வேதிப்பொருட்கள் துறை 6.05 பில்லியன் அமெரிக்க டாலரும் முதலீடாகியுள்ளது. 

 

இதில் அதிகம் முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூர் 12.97 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. மேலும், இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மொரிஷியஸ் 6 பில்லியன், நெதர்லாந்து 2.95 பில்லியன், ஜப்பான் 2.21 பில்லியன் மற்றும் அமெரிக்கா 2.34 பில்லியன் என முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்திலும் அமெரிக்க ஐந்தாவது இடத்திலும் உள்ளது தெரியவருகிறது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்