Skip to main content

காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பு!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இந்த பிரச்சனைகளை விவாதிக்கவும் இவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

european union-caa

 

 

மொத்தம் ஏழு தீர்மானங்களில் இந்தியா தொடர்பான இரண்டு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டுமே இந்தியாவின் உள்நாட்டு விவாகாரம் என்றாலும், ஜனநாயக அடிப்படையில் விவாதத்துக்குரிய விஷயமாக்கப்பட்டு இருக்கிறது. விவாதத்துக்கு அனுமதிக்கும் அளவுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் இந்தத் தீர்மானம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானங்கள் மீது 29 ஆம் தேதி விவாதம் நடைபெறும் என்றும் 30 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவு இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்