Skip to main content

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
jiyo

 

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த, ஊதிய முரண்பாடுகளை  களைய ஜாக்டோ ஜியோ கோரிக்கை விடுத்து ஜாக்டோ - ஜியோ ( அரசு ஊழியர் - ஆசிரிய) கூட்டமைப்பினர் இன்று தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முயன்றனர்.   முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட வந்த ஆயிரக்கணகானோர் சென்னை சேப்பாக்கத்தில் கைது செய்யப்பட்டனர்.  

 

 போராட்டத்தில் கைதான அனைவரும் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் இரவில், சென்னை எழும்பூரில் நடந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.  அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

jacto

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடுத்த கட்ட போராட்டம்  குறித்து  20ம் தேதி முடிவு செய்யப்படும் என்றுஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்