Skip to main content

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இளைஞர்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

ுபர

 

சென்னை கேளம்பாக்கம் சுப்பிரமணி மகன் பெருமாள் (வயது 36). தான் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகவும் தனது சகோதரி அதிமுக எம்பியாக இருப்பதால் அரசு வேலைகளில் அவருக்கான ஒதுக்கீடு இருப்பதால் பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 6 பேரிடம் ரூ.18 வரை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய சம்பவத்தில் கீரமங்கலம் போலீசார் பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

இந்த நிலையில் சென்னையில் பெருமாளிடம்  வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்த 9 பேர் இன்று செவ்வாய்க்கிழமை சென்னை வேப்பேரி காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த புகாரில் அதிமுக மாஜி எம்.பி.யின் சகோதரன் என்றும் தலைமைச் செயலகத்தில் வேலை செய்வதாகவும் கூறி மாஜி எம்.பி.க்காக ஒதுக்கப்பட்ட வேலைகள் உள்ளதாகக் கூறி  கன்னியம்மாள், சக்திவேல், கலைச்செல்வி, ராமநாதன், சந்திரமௌலி, செல்லப்பாண்டியன், ஜெயந்தி, சதாசிவம், லோகநாதன் ஆகியோரிடம் ரூ.64.10 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டுத் தப்பிச் சென்றவரை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். அதனால் எங்களை ஏமாற்றிய பெருமாளிடம் இருந்து எங்களுக்கு வர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளனர். மேலும் பெருமாளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விபரங்களையும் இணைத்துள்ளனர்.

 

படித்த இளைஞர்களை ஏமாற்றி தொடர்ந்து பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெருமாள் தான் மோசடி மூலம் பெற்ற பணத்தை பினாமி பெயர்களில் கார், வீடு, நகை, சொத்துகளை வாங்கி வைத்துக்கொண்டு தன்னிடம் பணமில்லை என்று தப்பிக்க நினைப்பதாக கூறுகின்றனர். ஆனால் அரசு வேலைக்காக வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்த பலரும் வட்டியும் கட்ட முடியாமல் கடனும் கட்ட முடியாமல் தற்கொலை முடிவுவரை சென்று திரும்பியுள்ளது வேதனையளிக்கிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து ஏமாந்தவர்களுக்குப் பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் மேலும் இது போல இளைஞர்கள் ஏமாறாமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்