Skip to main content

நேற்று நடந்த நீட் தேர்வு தமிழ்நாட்டில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? - பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ்! 

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

Will yesterday's NEET exam be the last NEET exam in Tamil Nadu?

 

திருச்சி மாநகராட்சி 61வது வார்டு பகுதியில் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும்போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

 

அதற்கு தமிழ்நாடு பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்து செய்யச் சொல்லி பேசியுள்ளதாக கூறினார். நேற்று (12.09.2021) நடந்த நீட் தேர்வு தமிழ்நாட்டில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்று கேட்டதற்கு, “நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறோம், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளை 40 முதல் 45 நாட்களுக்குப் பள்ளிக்கு வரவைப்பதுதான் முதல் இலக்கு. அதன் பிறகுதான் முறையான வகுப்புகள் நடைபெறும்” கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்