Skip to main content

மியூகோமைகோசிஸின் அறிகுறிகள் என்ன?

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

What are the symptoms of mycomycosis?

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிககைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

 

இந்த நிலையில், மியூகோமைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று தமிழகம் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மியூகோமைகோசிஸ் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்!

 

மியூகோமைகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது முக்கியமாக மற்ற உடல்நலப் பிரச்சனைகளுக்காக மருந்துகளை உட்கொள்ளும் மக்களைப் பாதிக்கிறது. இது நோய்க் கிருமிகளுடன் போராடும் திறனைக் குறைக்கிறது. 

 

பூஞ்சை வித்துகளைக் காற்றிலிருந்து சுவாசித்தப் பிறகு அத்தகைய நபர்களின் சைனஸ்கள் அல்லது நுரையீரல் பாதிப்புக்குள்ளாகும்.

 

கண்கள் அல்லது மூக்கைச் சுற்றி வலி மற்றும் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மனநிலையில் மாற்றம், மூச்சுத் திணறல் இரத்தவாந்தி  உள்ளிட்டவை மியூகோமைகோசிஸின் அறிகுறிகளாகும் என்று ஐ.சி.எம்.ஆர்.தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்