Skip to main content

ராணுவத்தை கொண்டு முக்கொம்பு அணையை சரிசெய்ய வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
p r pandian

 

 

 

ராணுவம் கொண்டு முக்கொம்பு கதவுணை சீர்மைக்க வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 8-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் விவசாயிகள் முக்கொம்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தொிவிதுள்ளார்.

 

திருவாரூரில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் போராட்டம் ஆயத்த கூட்டம் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கொம்பு அணை உடைப்பு, கடைமடை தண்ணீர் வராததது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

 

தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்," 
காவிரி அதிக அளவு தண்ணீர் வந்தும் கடைமடை பகுதிகளுக்கு தமிழக அரசால் தண்ணீரை கொண்டு சோ்க்க முடியவில்லை. அதிக மணல் கொள்ளையால் திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணை உடைந்து தமிழக அரசு சார்பில் மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக சீர்மைக்கும் பணிகள் தீர்வாகாது. எனவே ராணுவம் கொண்டு கதவணையை சீர்மைக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடடிவக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழக எடப்பாடி அரசை கண்டித்தும், பொதுப்பணித்துறையின் ஊழலை கண்டித்தும் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களின் விவசாயிகள் ஒன்றிணைந்து முக்கொம்பு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் ," என்றார்.

 

சார்ந்த செய்திகள்