Skip to main content

அரசு கல்லூரி முன்பு திடீர் முற்றுகை போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக எம்எல்ஏ 

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

 


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ளது அரசு கலை கல்லூரி.  இங்கு 500 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த ஆண்டு கல்லூரி மாணவர் சேர்க்கையை கல்லூரி முதல்வர் முத்துசாமி வேண்டுமென்றே தாமதப் படுத்துகிறார்.  புதிதாக சேர விரும்பிய மாணவர்கள் கல்லூரியில் மனு கொடுத்துள்ளனர்.  அப்படி கொடுத்த மாணவ, மாணவிகள் தினசரி 100க்கும் மேற்ப்பட்டவர்கள் கல்லூரிக்கு வந்து அலைகிறார்கள்.  ஆனால், கல்லூரி முதல்வர் முத்துசாமியோ  தினசரி 4 பேர்களுக்கு மேல் அட்மிஷன் போடுவதில்லை. காரணம் இப்படி அலையவிட்டால் பிள்ளைகள் சீட்டு கிடைக்காது என்று வேறு கல்லூரிகளுக்குசென்று சேர்ந்து கொள்வார்கள்.  அதன் பிறகு சீட்டுகளை பணத்திற்கு விற்கப்படுகிறது.

 

g


இதே போல் கடந்த 2016_2017 ஆண்டுகளின் போது இதே போன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் அப்போதும் இதே முத்துசாமிதான் இந்த கல்லூரி முதல்வராக இருந்தார்.   புகாரின் பேரில் மாறுதல் செய்யப்பட்டார். இப்போது மீண்டும் மந்திரிகள் சிபாரிசில் இங்கேயே முதல்வராக மீண்டும் இங்கு வந்து மாணவர்களை இம்சை செய்து வருகிறார்.    மேலும் பி.சி.கோட்டாவில் சுமார் 100 இடங்கள் காலியாக உள்ளன .அதில் யாரும் சேரவில்லை. அதை மற்றவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.  அதையும் செய்யவில்லை முதல்வர்.

 

 அதோடு இந்த ஆண்டு 24 சதவீதம் கூடுதலாக மாணவர்களை அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்க சொல்லி அரசு உத்திரவிட்டும் அதையும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யவில்லை முதல்வர்.    இப்படி ஏகப்பட்ட குமுறல்களை தொகுதி எம்எல்ஏ பிரபுவிடம் மாணவர்கள் சொல்ல கல்லூரி முதல்வரை பிரபு பலமுறை போனில் பேசிய போதும்,  மதித்து உரிய பதில் சொல்லவில்லை.  அதனால் கல்லூரிக்கே சென்று இன்று கேட்டபோது பின் வாசல் வழியாக வெளியேறியுள்ளனர் அங்கிருந்த ஊழியர்கள்.

 

இதையடுத்து எம் எல் ஏ வேலூரில் உள்ள வைஸ் சான்சிலரை போனில் தொடர்பு கொள்ள,  அவரும் போனை எடுக்கவில்லை.  இதனால் கோபமான எம்எல்ஏ பிரபு கட்சி காரர்களுடன் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்க பதறிப்போன போலீஸ் டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் ஓடி வந்தது.   அவர்களிடம் எம் எல் ஏ விபரத்தை சொல்ல,  போலீஸ்,  கல்லூரி விசியை போனில் பிடித்தது.  அவரை எம்எல்ஏ விடம் பேச வைத்தனர்.  எம். எல். ஏ. வி சியை கடுமையாக டோஸ் விட்டார்.

 

 தொகுதி எம்எல்ஏவிடம் பேச மாட்டீர்களா? என்று கேட்க வருத்தம் தெரிவித்த வி.சி.எம் எல் ஏ வின் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக கேட்டு வாங்கியுள்ளார்.  அதில் மாணவர் சேர்க்கை நேர்மையாக நடத்த வேண்டும் முதல்வர் முத்துசாமியை உடனடியாக மாற்றவேண்டும்.  அரசு அறிவித்த 25 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கையும் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எழுத்து மூலம் கொடுத்ததையடுத்து வரும் திங்கள்கிழமை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.சி.உறுதியளித்ததையடுத்து முற்றுகையை கைவிட்டார் எம்எல்ஏ பிரபு.  இவரின் போராட்டம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சியில்.

சார்ந்த செய்திகள்