Skip to main content

"லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை"- உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

 

vigilance department madurai highcourt bench judge

 

பட்டுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த மனு இன்று (15/09/2021) நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் விசாரணை என்பது பெயரளவிலேயே உள்ளது; முறையான விசாரணை, சோதனைகள் இல்லை. தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறைப் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது; வருடத்திற்கு 100 வழக்குகள் எனப் பதிவு செய்கின்றனர் என்று கூறி மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

 


 

சார்ந்த செய்திகள்