Skip to main content

பள்ளி சிறுவன் மது விற்கும் வீடியோ காட்சி... தலைமறைவான தாய்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

 Video footage of boy selling liquor... mother in hiding

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள கவுண்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவரது மகன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறான். கணவனை இழந்து வாழும் சாவித்திரி கள்ளத்தனமாக மது விற்று வரும் நிலையில் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

 

இந்நிலையில் கள்ள மதுவிற்பனை தொடர்பாக போலீசார் அடிக்கடி  கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால் சாவித்திரி  பள்ளியில் பயின்று வரும் தனது 7 வயது மகனை மதுவிற்பனையில் ஈடுபடுத்தியுள்ளார். இந்நிலையில் சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் தாயும் மகனும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு; டவர் மேல் ஏறிய வேட்பாளரால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rejection of nomination in by-election; A sensation by the candidate who climbed to the top of the tower

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து கழக நடத்துநர் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத்  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா,திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் அவரின் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நாகர்ஜுனா!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Nagarjuna met the fan in person and expressed regret

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம்  ‘குபேரா’. இப்படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து தொட்டு பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்தார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டார். 

இந்த நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை விமான நிலையத்தில் நாகர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அந்த ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, ‘உங்கள் மீது எந்த தப்பும் இல்லை’ எனக் கூறி அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.