Published on 03/01/2020 | Edited on 03/01/2020
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் ஜனவரி இரண்டாம் தேதி (நேற்று முதல்) காலை 8 மணி முதல் தற்போதுவரை 24 மணிநேரத்தை கடந்து எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் நாமக்கல்லில் இலக்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 1 வாக்கில் பொன்னம்மாள் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அந்த இடத்தில் போட்டியிட்ட ரேஷ்மி என்பவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில் பொன்னம்மாள் 453 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.