Skip to main content

வேலூர் தொகுதி தேர்தலை நடத்து – திமுக கதிர்ஆனந்தும் மனு

Published on 26/04/2019 | Edited on 27/04/2019

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குபதிவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக ஏப்ரல் 16ந்தேதி இரவு தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக நிறுத்தியது. இதனை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

 

dmk

 

அதன்பின், பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளோடு சேர்த்து வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும் நடத்த வேண்டும்மென ஏப்ரல் 25ந்தேதி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா என்பவரிடம் மனு தந்துவிட்டு வந்தார்.

 

 

இந்நிலையில், இன்று டெல்லி சென்ற திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், திமுக எம்.பிக்கள் திருச்சி.சிவா, ஆலந்தூர் பாரதி போன்றவர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கு உடனடியாக தேர்தலை நடத்த ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்மென மனு தந்துவிட்டு வந்துள்ளார்கள். 

 

 

இதுவரை ஏ.சி.சண்முகம் மட்டும்மே, தேர்தலை நடத்த வேண்டும்மென கோரிக்கை விடுத்துவந்தார். தற்போது திமுக கதிர்ஆனந்த் தும் அந்த கோரிக்கையை வைப்பதை பார்த்து வேலூர் தொகுதி திமுகவினரிடம் சுறுசுறுப்பு தெரிகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்