Skip to main content

விருத்தாசலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!  

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த  அகரம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தனது   சொந்த நிலத்திற்கு பட்டா பெயர்  மாற்றம் அவ்வூர் கிராம நிர்வாக அலுவலரான ஆனந்தராஜ் (வயது 30) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு விஏஒ பட்டா மாற்றம்  செய்ய  ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  இது குறித்து செந்தில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் கூறியுள்ளார். 

 

v

 

பின்னர் லஞ்ச ஒழிப்பு  போலீசார் கூறியபடி  விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்க அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஒட்டிமேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தராஜிடம்  அட்வான்ஸ் தொகையாக  ஐந்தாயிரம் ரூபாயை  லஞ்சமாக  கொடுத்தார்.

 

அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஒ ஆனந்தராஜை கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர். விஏஒ ஆனந்தராஜ் சொந்த ஊர் விருத்தாசலம் அருகிலுள்ள  கம்மாபுரம், அவரது தந்தை பாலகிருஷ்ணன் கிராம நிர்வாக உதவியாளராக  பணியாற்றி கொண்டு இருந்தபோது இறந்துவிட்டார்.  


தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளார் ஆனந்தராஜ்.    கைது செய்த விஏஒவை  போலிசார் மேலும் விசாரணைக்காக  கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.