Skip to main content

நெய்வேலி அருகே மூடப்படாத ஓ.என்.ஜி.சியின் ஆழ்குழாய் கிணறுகள்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள  வடக்குத்து முந்திரிக்காட்டு பகுதியில்  இருபது ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் ஆய்வுக்காக போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் பல  மூடப்படாமல் வயல்வெளியில் வாய் பிளந்து கிடக்கின்றன.  

 

unused ongc borewells

 

 

இக்குழிகளின் அபாயம் புரியாமல் ஆடுமாடு மேய்க்கிறவர்கள் கால்களை தொங்கவிட்டுக் கொண்டு உட்காருவதும்,  சிறுவர்கள் ஓணான்களை பிடித்து உள்ளே விட்டு விளையாடுவதும் அவ்வப்போது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம்.  

மேலும் இதுபோன்ற  குழிகள்  அப்பகுதிகளில் ஏராளமாக இருந்து கொண்டிருக்கின்றன என்றும், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.  

எண்ணெய் சோதனைக்காக 500 அடிக்கும் மேலாக தோண்டப்பட்டுக் கிடக்கும் இவைகளை என்ன தொழில்நுட்பத்தில் மூடவேண்டும் என புரியாமல் தற்போது அப்பகுதி மக்கள் விழிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்