Skip to main content

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

பரக

 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முறைப்படி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. முதல்நாளான நேற்று மத்திய நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

 

பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை  ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். 5 மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு வரிச்சலுகை அதிகம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்