Skip to main content

சாதனைக் குழந்தைகள்! - ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகாரம்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

Two year old children who made it to the India Book of Records

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதி, சந்தப்பேட்டையைச் சேர்ந்தவர் நசீர் அஹமத் (31). இவர், வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இவரது மனைவி இர்பானாபேகம். இவர்களுக்கு இசான், இன்சியா, என இரு குழந்தைகள் உள்ளனர். இருவருமே இரட்டையர்கள். இவர்களுக்கு இரண்டு வயதாகிறது. 

 

இவ்விரு குழந்தைகளும் 22 வகையான பறவைகளின் பெயர்களை தெளிவாகக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி 19 வகையான வாகனங்களின் பெயர்கள், ஆங்கில உயிர் எழுத்துக்கள், மனித உடல் பாககங்களின் பெயர்கள் எனப் பல விஷயங்களை தங்குதடையின்றி தெளிவாக மழலை மொழியில் கூறுகின்றனர். இவர்களின் கூர்மையான அறிவுத் திறமையைப் பார்த்த அவர்களது பெற்றோர், அந்தக் குழந்தைகளைப் பேச வைத்து அந்தப் பேச்சை வீடியோவாகப் பதிவு செய்து ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்ற சாதனைகளை அங்கிகரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

அதைப் பார்த்து வியந்துபோன அந்த நிறுவனம், இரண்டு வயதில் இரட்டைப் பிள்ளைகளின் அறிவுக்கூர்மையைப் பாராட்டி 2021ஆம் ஆண்டிற்கான சாதனையாளர்களாக ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர். மேலும் அந்த நிறுவனம் இரண்டு குழந்தைகளுக்கும் பதக்கம் மற்றும் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளனர். 

 

இரட்டைப் பிள்ளைகளின் அறிவுக்கூர்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் பெயர்கள் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது, அவர்களது பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்