Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மனித உரிமை ஆணையம் இன்று நேரில் விசாரணை!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று நேரில் விசாரணை நடத்துகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேரில் சென்று விசாரணை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடிக்கு அனுப்புகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையமே, தூத்துக்குடிக்கு நேரடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தவுள்ளது. இந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். 4 பேர் கொண்ட குழு, தனது விசாரணை அறிக்கையை 2 வாரங்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்