நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்ட அவதூறு பதிவுகளை நீக்கக் கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையான மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து தான் வெளியேறுவதாக எஸ்.பி வருண் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாத நபர் சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நபர்களுடைய ஐடிகள் தேவை. அப்பொழுது தான் இதுகுறித்து விசாரணை முறையாக செய்ய முடியும் என எஸ்.பி வருண் குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை போலி முகவரிகள் கொண்டு பதிவிடுவது அதிகரித்திருப்பதாகவும், எக்ஸ் வலைத்தளத்தில் கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார். இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி, அவதூறு பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசு மற்றும் எக்ஸ் வலைத்தள பொறுப்பு அதிகாரி பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.