Skip to main content

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - சுற்றுலா வழிகாட்டி கைது

Published on 12/03/2018 | Edited on 12/03/2018


 

தேனி மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

பலியான 9 பேரின் சடலங்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மலையேற்ற பயிற்சி நிறுவனம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் காட்டுக்குள் அவர்கள் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில், மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் தீவிர விசாரணை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Serious investigation of the arrested illicit

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளச்சாரயா வியாபாரிகள் கண்ணுகுட்டி(எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா‌,‌ அவரது தம்பி தாமோதரன் உள்ளிட்ட 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Next Story

பசுமாட்டின் வாயில் வெடித்த நாட்டு வெடிகுண்டு - இருவர் கைது 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Two people were arrested for storing

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினரின் பசுமாடு ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது, அங்கே நிலத்தில் ஏதோ காய் எனக் கடித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

இது குறித்து  உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலங்களில் ஆங்காங்கே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதும். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாட்டின் வாய் மற்றும் தாடை கிழிந்ததும் தெரியவந்தது. 

இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.