
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப் 2 மெயின் தேர்வு இன்று தாள்-1 காலையிலும் தாள்-2 மாலையிலும் நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டையில் மாமன்னர் கல்லூரியில் நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்குள் சென்றுள்ளனர். காலை 9.30 மணிக்கு தாள்-1க்கான வினாத்தாள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 10 மணியைக் கடந்தும் வினாத்தாள் வழங்கவில்லை. வினாத்தாளில் குழப்பம் இருப்பதால் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் தாமதமாகத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேர்வர்கள் ஒரு பக்கமும் துணைக்கு சென்ற பெற்றோர்கள் வெளியிலும் பதற்றத்தில் உள்ளனர். இதே போன்று தமிழகத்தின் சென்னை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தாமதமாகத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மேலும், தாமதமாகத் தேர்வு தொடங்கிய தேர்வர்களுக்கு தேர்வுக்கு உரிய கால அளவான 3 மணி நேரம் முழுமையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.