Skip to main content

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

TN PALANISAMY DISCUSSION DOCTORS AND OFFICERS CORONAVIRUS PREVENTION


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மூன்றாவது முறையாக நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் இந்தமுறை போடப்படும் ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் எனக் கூறினார். ஊரடங்கு நீட்டிப்பு தேதி மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

TN PALANISAMY DISCUSSION DOCTORS AND OFFICERS CORONAVIRUS PREVENTION


இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை, பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக ஜெனீவா, வேலூர், ஈரோடு மற்றும் சென்னையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.   

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Rain alert for 11 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் கேரளாவில் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.